கும்பகோணம் ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா
கும்பகோணம் புறப்பகுதி ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா நடைபெற்றது.
கும்பகோணம் புறப்பகுதி ரெட்டிபாளையம் உத்தராபதீஸ்வரர் கோயிலில் சிறுத்தொண்டர் அமுது படையல் விழா நடைபெற்றது.
கும்பகோணம் வட்டம் ரெட்டிபாளையம் கிராமத்தில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் குழந்தை வரம் அருளும் அருள்மிகு உத்தராபதீஸ்வரர் ஆலயத்தில் சிறுத்தொண்டர் அமுது படையல் திருவிழா நடைபெற்றது.
இதில் சிவனடியார்கள் பதிகம் படித்து வர சிறுத்தொண்டர் வடிவில் ஆலய பூசாரி அருள் வாக்கு செல்லிய படி வீதியுலா வந்தார். அப்போது அவரிடம் பக்தர்கள் அருள் வாக்கு கேட்டுச் சென்றார்கள்.
Advertisement
Advertisement
நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்படுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரெட்டிபாளையம் கிராமவாசிகள் செய்திருந்தார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.