FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சர்ச்சைப் பேச்சு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைது செய்ய பிடிவாரண்ட்!

முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைதுசெய்து ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:36 pm IST
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி - கோப்புப் படம்
பகிர்:

சைவ - வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைதுசெய்து ஆஜர்படுத்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் 2025 ஏப்ரல் 6 ஆம் தேதியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் சைவ - வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆபாசமாகப் பேசியிருந்தார். இதனையடுத்து, மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளைப் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் பொன்முடிக்கு எதிராக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், தனிநபர் புகார் அளித்திருந்தார்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்குகோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

ஆனால், பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி நீதிபதி, அவரை செப். 2 ஆம் தேதிக்குள் கைது செய்து, ஆஜர்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை செப். 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, திமுக பொதுக்கூட்டத்தில் பெண்கள் குறித்து கொச்சையாகப் பேசியதாக பொன்முடிக்கு எதிராக அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அப்போதைய வனத்துறை அமைச்சராக இருந்த அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Arrest warrant issued for DMK Former Minister Ponmudi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments