சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு இன்று ருத்ர மகாபிஷேகம்!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் புரட்டாசி மாத ருத்ர மகாபிஷேகம் சனிக்கிழமை (அக்.8) நடைபெறுகிறது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் புரட்டாசி மாத ருத்ர மகாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில், ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். அதன்படி, புரட்டாசி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனக சபையில் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறும்.
படிக்க: திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்கும் மக்கள்!
Advertisement
Advertisement
முன்னதாக, அதிகாலை 4 மணியளவில் சுவாமி சன்னதி திறக்கப்பட்டு உச்சி கால பூஜை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கனக சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா் உள்ளிட்ட பலவகை பொருள்களால் மகாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.