அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்!
ஆடித் திருவிழாவையொட்டி சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டம் பற்றி..
ஆடித் திருவிழாவையொட்டி சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆடி மாதத்தையொட்டி சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோயில்களிலும் திருவிழா களைகட்டியுள்ளது. பொங்கல் வைபவம், தீ மிதித்தல், அலகு குத்துதல், என மாநகரம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் எழுந்தருளிய அம்மனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Advertisement
Advertisement
இந்த தேரோட்டத்தில் பெண் குழந்தைகள் கோலாட்டம் ஆடியும், மாணவர்கள் சிலம்பம் சுற்றியும் பங்கேற்றனர். காந்தி மைதானம் பகுதியில் உள்ள தேர் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியே சென்ற தேரோட்ட நிகழ்ச்சியைப் பக்தர்கள் கண்டு அம்மனை தரிசித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.