ஆடி அமாவாசை: திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது பற்றி..
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் நீர் சுமார் 80 அடி உள்வாங்கியது.
திருச்செந்தூரில் பௌா்ணமி, அமாவாசை, அஷ்டமி, நவமி உள்ளிட்ட திதி நாள்கள் மற்றும் அதையொட்டிய நாள்களில் ஒரு சில தினங்கள் காலையில் கடல் நீா் உள்வாங்குவதும், பிற்பகல் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வழக்கமாக உள்ளது.
ஆடி அமாவாசையான இன்று அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் திரண்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆடி அமாவாசையான இன்று கோயில் அருகே கடல் நீா் சுமாா் 80 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால், பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. ஆனால் சிறிது நேரத்தில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
The sea water receded by about 80 feet near the Arulmigu Subramania Swamy Temple in Tiruchendur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.