எந்த கோயிலில் என்ன விசேஷம்? குமரகோட்டத்தில் கும்பாபிஷேகம்!
சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நன்னீராட்டுப் பெருவிழா பற்றி..

காஞ்சிபுரம், குமரகோட்டம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நன்னீராட்டுப் பெருவிழா நவம்பர் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை ஞாயிறு தீர்த்தவாரியில் 2-ஆம் ஞாயிறு தீர்த்தவாரி நவம்பர் 29-ஆம் தேதி காலை 6 மணியளவில் குப்த கங்கையில் நடைபெற இருக்கிறது.
சென்னை, பம்மல், வ.உ.சி. நகர், பாலாஜி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலய சேவா சமாஜத்தில் திருக்கல்யாண உற்சவம் நவம்பர் 29-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெற இருக்கிறது. மாலை 6 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் நடைபெறும்.
Advertisement
Advertisement