FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீனாட்சி அம்மன் கோயிலில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது தொடர்பாக..

29 வினாடிகள் முன்பு
பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்
பகிர்:

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ள நிலையில் இன்று கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகள் எனப்படும் இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா கோலம்பூண்டிருக்கும் மரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு 2023-ம் ஆண்டு ஆகம முறைப்படி பாலாலயம் செய்யப்பட்டு கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நாளை(செப். 17) கும்பாபிஷேகம் காண உள்ளது. இதற்காக செப். 6 முதல் வடக்காடி வீதியில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வான இன்று கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி பரிவார யாகசாலை பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பரிவார கலசங்களுடன் புறப்பாடாகியது. பின்னர் 5 மணிக்கு பரிவார மூர்த்திகளின் சன்னதி கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மீனாட்சி அம்மன் கோயிலில் பரிவார மூர்த்திகளாக முக்குறுணி விநாயகர், சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நோமாஸ் கந்தர், தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரங்கள், காளி, ஊர்த்தாண்டவ மூர்த்தி, 63 நாயன்மார்கள், சரஸ்வதி, லட்சுமி, வெள்ளியம்பல நடராஜர், சந்திரசேகரர் பிரதோஷ நாயனார் உள்ளிட்ட 4147 தெய்வங்கள் உள்ளனர். இவர்களின் சன்னதியில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்திற்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments