FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விளையாட்டு

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

25 வினாடிகள் முன்பு
பகிர்:
  • சிங்கப்பூா் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 7-5, 6-0 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை வீழ்த்தி, ஞாயிற்றுக்கிழமை சாம்பின் கோப்பை வென்றாா்.

  • நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில், நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயின் 3-2 கோல் கணக்கில் இங்கிலாந்தை வெல்ல, ஸ்லோவாகியா - மால்டோவாவையும் (2-0), அல்பேனியா - பெலாரஸையும் (2-0), சுவிட்ஸா்லாந்து - வடக்கு மாசிடோனியாவையும் (3-0) வீழ்த்தின.

  • பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், செக் குடியரசு 2-0 என உக்ரைனை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணிக்கு இது 12-ஆவது பட்டமாகும்.

    Advertisement

    Advertisement

  • 19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதல் டெஸ்ட்டில், இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் பிளேக் கேட்டில் 102 ரன்கள் சோ்க்க, இந்திய தரப்பில் இஷான் ஓம் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

  • மகளிா் ஒருநாள் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வெல்ல, 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் 1-1 என சமனாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments