FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

கபில் தேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை முறியடித்தார் ஜஸ்பிரித் பும்ரா.

Updated On : 18 டிசம்பர் 2024, 10:45 am IST
ஜஸ்பிரித் பும்ரா
பகிர்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களிலும், இந்திய அணி 260 ரன்களில் ஆல் அவுட் ஆகின. தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய இந்தியாவின் வேகப்பந்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறியது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க..:பும்ரா - ஆகாஷ் தீப் வேகத்தில் வீழ்ந்தது ஆஸி.! இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கம்மின்ஸ் டிக்ளேர் செய்தார்.

இந்திய அணித் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதல் இன்னிங்ஸிலும் 6 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா 21 விக்கெட்டுகள் எடுத்து இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவைப் பின்னுக்குத் தள்ளி ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தை தனதாக்கியுள்ளார்.]

இதையும் படிக்க..:நியூஸி. அணியின் புதிய கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமனம்!

ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகள்

  • ஜஸ்பிரித் பும்ரா -52

  • கபில் தேவ் -51

  • சர்ஃபராஸ் நவாஸ் -50

  • அனில் கும்ப்ளே -49

  • இம்ரான் கான் -45

  • ரவிச்சந்திரன் அஸ்வின் -40

இதையும் படிக்க..:சதமடித்தவருக்கு அறிவுரை ஏன்? கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ஆவேசம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments