FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

முதல் இந்திய வீரர்... ஜஸ்பிரித் பும்ராவின் தனித்துவமான சாதனை!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்காக தனித்துவமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

Updated On : 15 ஜூலை 2026, 1:07 pm IST
ஜஸ்பிரித் பும்ரா (கோப்புப் படம்)
பகிர்:

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்காக தனித்துவமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன் மூலம், அவர் ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement

Advertisement

அதுமட்டுமின்றி, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதுவரை இந்திய அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா 52 டெஸ்ட் போட்டிகளில் 234 விக்கெட்டுகள், 90 ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் மற்றும் 95 டி20 போட்டிகளில் 121 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

summary

Indian fast bowler Jasprit Bumrah has achieved a unique record for the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments