FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

Updated On : 14 ஜூலை 2026, 5:04 pm IST
ஜஸ்பிரித் பும்ரா - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று (ஜூலை 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜேக்கப் பெத்தேல் 14 ரன்களும், பென் டக்கெட் 43 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஹாரி ப்ரூக் ஒரு ரன்னில் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Advertisement

Advertisement

ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை வீழ்த்தியபோது, ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ஜஸ்பிரித் பும்ரா. மேலும், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

முன்னதாக, இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா 30 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார். அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

summary

Indian fast bowler Jasprit Bumrah has set a new record in One Day Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments