பும்ரா கால்பந்து வீரரா? வருத்தம் தெரிவித்த ராம் சரண்!
ராம் சரணின் புதிய பதிவு குறித்து...
நடிகர் ராம் சரண் கிரிக்கெட் வீரர் பும்ரா குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் மிகப்பெரிய பொருள்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதில், அனைத்து விளையாட்டுகளிலும் சிறப்பானவராக உள்ளூர் வீரராக ராம் சரண் நடித்துள்ளார். முக்கியமாக, இப்படத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளும் அதிகம் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் ராம் சரணிடம் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி குறித்து கேட்கப்பட்டதற்கு அவர்களின் சிறப்பம்சம் குறித்து சில வார்த்தைகளில் கூறினார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, பந்துவீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ராம் சரண், “பும்ராவின் பெரிய ரசிகன் நான். அவரின் கால்பந்தாட்டத்தை நான் நேசிக்கிறேன். லவ் யூ சார்” என்றார். ராம் சரண் பும்ராவைக் காலபந்தாட்ட வீரர் என நினைத்துக்கொண்டு இப்படி பதிலளித்தது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் பும்ரா குறித்த விடியோவை வைரலாக்கி வந்தனர்.
தற்போது, இதுகுறித்து ராம் சரண் பதிவிட்டுள்ளார். அதில், “நான் உண்மையிலேயே சில நேரங்களில் பெயர்களை மறந்துவிடுவேன். கூட்டத்திற்கு மத்தியில் உற்சாகமாக இருந்ததால் சிறிய மனித தவறு நிகழ்ந்ததற்காக உங்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன் ஜஸ்பிரீத் பும்ரா. உண்மையில், உங்களை நான் மதிக்கிறேன். உங்கள் ஆட்டத்திற்கு நான் பெரிய ரசிகன். நீங்கள் ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமையடையச் செய்கிறீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
actor ram charan has apologised to jasprit bumrah
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.