2ஆவது டெஸ்ட்: இருவர் சதம், தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 307 ரன்கள் குவித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 307ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி வங்தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட்டில் முதல் பேட்டிங் செய்த தெ.ஆ. முதல்நாள் முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்துள்ளது.
ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஜி தங்களது முதல் டெஸ்ட் சதமடித்து அசத்தினார்கள். மார்க்ரம் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
டேவிட் பெடிங்டன் 18 ரன்களுடனும் டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள்.
வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.