முகப்பு
கிரிக்கெட்

முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!

டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் விளாசியதை இந்திய ராணுவத்துக்கு இளம் வீரர் துருவ் ஜுரெல் சமர்ப்பித்துள்ளார்.

Updated On : 3 அக்டோபர் 2025, 6:27 pm IST
சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய துருவ் ஜுரெல் - படம் | பிசிசிஐ
பகிர்:

டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம் விளாசியதை இந்திய ராணுவத்துக்கு இளம் வீரர் துருவ் ஜுரெல் சமர்ப்பித்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Advertisement

Advertisement

இந்திய அணியில் கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சதம் விளாசி அசத்தினர். 24 வயதாகும் இளம் வீரரான துருவ் ஜுரெல் டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 210 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

சதம் விளாசியதை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக துருவ் ஜுரெல் கொண்டாடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு

டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தைப் பதிவு செய்த நிலையில், துருவ் ஜுரெல் தனது சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியதை கொண்டாடியதை என்னுடைய அப்பாவுக்கும், சதம் விளாசியதை கொண்டாடியதை இந்திய ராணுவத்துக்கும் சமர்ப்பிக்கிறேன். போர்க்களத்தில் நமக்காகப் போராடும் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

அணியில் விளையாட இடம் கிடைக்காவிட்டாலும், தொடர்ச்சியாக கடினமாக உழைத்தேன். அதனால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சதம் விளாசினேன். கடின உழைப்பின் மூலம் இந்த சதம் எனக்கு கிடைத்துள்ளது என்றார்.

துருவ் ஜுரெலின் தந்தை கார்கில் போரின்போது, இந்திய ராணுவத்தில் சேவையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Young batsman Dhruv Jurel has dedicated his first Test century to the Indian Army.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments