சதம் விளாசிய துருவ் ஜுரெல்; 503 ரன்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நேற்று (ஆகஸ்ட் 23) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. துருவ் ஜுரெல் 7 ரன்களுடனும், சரண்ஷ் ஜெயின் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (ஆகஸ்ட் 24) தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சரண்ஷ் ஜெயின் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ரிட்டையர்டு ஹர்ட் ஆன ரிஷப் பந்த் மீண்டும் பேட்டிங்குக்கு வந்தார்.
Advertisement
Advertisement
துருவ் ஜுரெல் மற்றும் ரிஷப் பந்த இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 89 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துருவ் ஜுரெல் டெஸ்ட் போட்டிகளில் அவரது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. துருவ் ஜுரெல் 177 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கேஷரா நுவந்தா தலா இரண்டு விக்கெட்டுகளையும், லகிரு குமாரா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி தற்போது அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
In the second Test match against Sri Lanka, the Indian team declared their first innings at 503 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.