மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர் கைது..! பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் குறித்து...
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (39 வயது) மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால், கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியில் விளையாடிவரும் வார்னர் இந்தப் பிரச்னையினால் பாகிஸ்தானுக்குச் செலவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிட்னியில் மரூப்ரா, மலபார் சாலையில் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
காவலர்கள் நடத்திய சோதனையில் 0.104 என்ற அளவில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு கூடுதலானது எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, மரூப்ரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
டேவிட் வார்னர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினால், அவர் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் வார்னர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுப்பு வாங்கி ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கராச்சி கிங்ஸ் அணிக்கு வார்னர் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துமென கணிக்கப்படுகிறது.
கராச்சி கிங்ஸ் அடுத்த போட்டியில் ஏப்.9ஆம் தேதி விளையாட இருக்கிறது. முன்னதாக, 2013 ஆஷஸ் தொடரில் வார்னர் குடித்துவிட்டு, ஜோ ரூட்டை தாக்கியதும் கவனிக்கத்தக்கது.