FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனிக்கு இடமிருக்கிறதா?

சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் தோனிக்கு இடமிருக்கிறதா என்பது குறித்து...

Updated On : 14 ஏப்ரல் 2026, 6:01 pm IST
மகேந்திர சிங் தோனி - படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் லீக்கின் 22ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்றிரவு சேப்பாக்கத்தில் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் தோனிக்கு பிளேயிங் லெவனில் இடமிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு வரும் தோனி இதில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

44 வயதாகும் எம்.எஸ். தோனி பின் தசைக்காலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் இந்த சீசனில் முதல் நான்கு போட்டிகளில் விளையாடவில்லை. வெளியூர் போட்டிகளுக்கும் பயணம் செய்யாமல் ஹோட்டலில் தங்கி இருந்தார்.

Advertisement

Advertisement

இன்று நடைபெறும் போட்டியில் தோனி வந்தால் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதுதான் சிஎஸ்கே அணி ஓரளவுக்கு சரியான பிளேயிங் லெவனை கண்டறிந்துள்ளது.

தோனி வந்தால் பேட்டிங்கில் யாரை எடுப்பது என்பது கேள்வியாக இருக்கிறது. டாப் 3ல் ருதுராஜ், சாம்சன், ஆயுஷ் மாத்ரே இருக்கிறார்கள். வரிசை 4,5,6ல் சர்ஃபராஸ், பிரேவிஸ், துபே இருக்கிறார்கள்.

வரிசை 7,8,9ல் ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அகமது இருக்கிறார்கள். வரிசை 10,11ல் கம்போஜ், கலீல் அகமது இருக்கிறார்கள். 12ஆவது வீரராகவும் இம்பாக்ட் வீரராகவும் குர்ஜ்பனீத் சிங் இருக்கிறார்.

நூர் அகமது அல்லது அகீல் ஹொசைனை எடுத்தால் மட்டுமே தோனிக்கு இடமிருக்கிறது. அல்லது சர்ஃபராஸ் கானை எடுக்க வேண்டும். இது மிகவும் கடினமான முடிவாக சிஎஸ்கே நிர்வாகத்துக்கு இருக்கும்.

பந்துவீச்சில் சொதப்பும் கலீல் அகமதுக்கு பதிலாக ராமகிருஷ்ணா கோஷ் களமிறங்கினால் நன்றாக இருக்குமென அஸ்வின் தெரிவித்திருந்தார். அதனால், இப்போதைக்கு தோனிக்கு இடமில்லை என்றே விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

summary

Is there a place for Dhoni in CSK's Playing XI?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments