ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன் புதிய சாதனை!
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 47 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசன் 13 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
Advertisement
Advertisement
நேற்றையப் போட்டியில் மூன்று சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்கள் விளாசி ஹென்ரிச் கிளாசன் சாதனை படைத்துள்ளார். இதுவரை 56 போட்டிகளில் விளையாடியுள்ள கிளாசன் 102 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sunrisers Hyderabad player Heinrich Klaasen has set a new record in the IPL series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.