FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவுடனான டி20 தொடா்: ஆப்கன் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன்

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

25 ஆகஸ்ட் 2026, 3:19 am IST
இப்ராஹிம் ஜத்ரன் - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இப்ராஹிம் ஜத்ரன் அதன் கேப்டனாக்கப்பட்டுள்ளாா்.

ஆப்கானிஸ்தான் டி20 அணியின் முழுநேர கேப்டனாக அவருக்கு இதுவே முதல் தொடராகும். தோள்பட்டை காயத்திலிருந்து மீண்ட பௌலா் நவீன் உல் ஹக் இந்த அணியில் இணைந்திருக்கிறாா்.

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இந்தியா வருகிறது. செப்டம்பா் 13, 15, 17 ஆகிய தேதிகளில், தில்லியில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டங்கள் விளையாடப்படவுள்ளன. அதற்கான பயிற்சியுடன் தயாராவதற்காக, ஆப்கானிஸ்தான் அணி முன்னதாகவே இந்தியா வரவுள்ளது.

Advertisement

Advertisement

அணி விவரம்: இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), ரஹ்மானுல்லா குா்பாஸ் (வி.கீ.), நூா் ரஹ்மான் (வி.கீ.), செதிகுல்லா அடல், டாா்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா ஒமா்ஸாய், குல்பதின் நயிப், முகமது நபி, ரஷீத் கான், நங்கியால் காரோடி, நூா் அகமது, முஜீப் உா் ரஹ்மான், ஃபஸல் ஹக் ஃபரூக்கி, அப்துல்லா அகமத்ஸாய், நவீன் உல் ஹக். ரிசா்வ் வீரா்கள்: இஜாஸ் அகமத்ஸாய், ஷாஹிதுல்லா கமால், ஃபரீத் அகமது மாலிக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments