FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

தி ஹன்ட்ரட்: பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்திய ஃபாத்திமா சனா!

தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசி ஆதிக்கம் செலுத்திய ஃபாத்திமா சனா குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 12:06 pm IST
ஃபாத்திமா சனா - படம்: இன்ஸ்டா / ஃபாத்திமா சனா, மைன்டர் ஸ்போர்ட்ஸ்.
பகிர்:

தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீசிய ஃபாத்திமா சனா ஆதிக்கம் செலுத்திய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் மகளிருக்காக நடைபெறும் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் இந்த சீசன் போட்டிகள் ஜூலை 21 முதல் ஆக.16ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.

நேற்றிரவு நொட்டிங்கம் திடலில் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் - ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணியினர் மோதினர். இதில் டாஸ் வென்ற ட்ரென்ட் ராக்கெட்ஸ் பந்துவீசினர்.

Advertisement

Advertisement

முதலில் பேட்டிங் செய்த பர்மிங்காம் ஃபீனிக்ஸ் 100 பந்துகளில் 122/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எம்மா லாம்ப் 45 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய ட்ரென்ட் ராக்கெட்ஸ் 84 பந்துகளில் 124/4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி தோல்வியுற்றாலும் அதன் பந்துவீச்சாளர் ஃபாத்திமா சனா கவனம் பெற்றுள்ளார்.

பவர்பிளேவில் பந்துவீசி 3 ஓவர்களில் அதாவது 15 பந்துகளில் (இந்த லீக்கில் ஒரு ஓவருக்கு 5 பந்துகள் மட்டுமே) 9 ரன்கள் மட்டுமே வழங்கி கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.

பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டனான இவரை பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி பேட்டிங்கில் பெரிதாக பயன்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களிடம் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

The hundred league fatima sana bowling exceptionally well for Birmingham Phoenix womens

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments