கால்பந்து - கிரிக்கெட்: ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த ஃபாதிமா சனா, உஸ்மான் தாரிக்!
இங்கிலாந்து கால்பந்து வீரரைச் சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர், வீராங்கனை குறித்து...
இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜூட் பெல்லிங்கமைச் சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உஸ்மான் தாரிக், வீராங்கனை ஃபாதிமா சனா சந்தித்தார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இங்கிலாந்தில் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்கம் வந்து கிரிக்கெட் விளையாடினார்.
தி ஹன்ட்ரட் கிரிக்கெட் லீக் இந்த சீசன் போட்டிகள் ஜூலை 21 முதல் ஆக.16ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நேற்றிரவு பர்மிங்காம் ஃபீனிக்ஸ் - வெல்ஷ் ஃபயர் அணிகள் மோதின.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் வெல்ஷ் ஃபயர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தப் போட்டியைக் காண ஜூட் பெல்லிங்கம் வந்திருந்தார். அங்கு பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக், வீராங்கனை ஃபாதிமா சனா சந்தித்தார். கிரிக்கெட்டும் விளையாடிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
கால்பந்து உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி மூன்றாமிடம் பிடித்து அசத்தியது. ஜூட் பெல்லிங்கம் சிறப்பாக விளையாடினார். தற்போது, தனது தற்காலிக ஓய்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.
பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணியில் ஆடவர் அணியில் உஸ்மான் தாரிக்கும் மகளிர் அணியில் ஃபாதிமா சனாவும் விளையாடி வருகிறார்கள்.
இந்தத் தொடரில் ஆடவர் பர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணி தொடர்ச்சியாக தனது மூன்றாவது தோல்வியைச் சந்தித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Jude Bellingham meets Pakistan cricketers Usman Tariq and Fatima Sana in The Hundred
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.