FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தோல்வியிலும் ஆட்ட நாயகி விருது வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா!

மகளிருக்கான ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகி வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா குறித்து...

54 வினாடிகள் முன்பு
ஃபாத்திமா சனா (கோப்புப் படம்) - AFP
பகிர்:

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா ஆட்ட நாயகி வென்றார். அந்த அணி தோல்வியுற்ற போதிலும் அவரது ஆட்டம் பலரையும் வியக்க வைத்தது.

நேற்றிரவு துபையில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 130/5 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார்.

Advertisement

Advertisement

அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 18.4 ஓவர்களில் 134/6 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக ஹர்சிதா சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் கேப்டன் ஃபாதிமா சனா 3.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் அந்த அணி தோல்வியடைந்தது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனியாளாக அசத்திய ஃபாத்திமா சனா ஆட்ட நாயகி விருது வென்றார். பல போட்டிகளில் அவர் மட்டுமே நன்றாக விளையாடி அணி தோல்வியடைவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.

summary

Pakistan captain Fatima Sana wins Player of the Match award despite the loss!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments