FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கங்குலி பாணியில் லார்ட்ஸ் திடலில் கொண்டாடிய இந்திய கலப்பு மாற்றுத்திறனாளி அணியினர்!

இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய கலப்பு மாற்றுத்திறனாளிகள் அணியினர் கங்குலியின் புகழ்பெற்ற கொண்டாட்டத்தைச் செய்தது குறித்து...

48 வினாடிகள் முன்பு
கங்குலி பாணியில் லார்ட்ஸ் திடலில் கொண்டாடிய இந்திய கலப்பு மாற்றுத்திறனாளி அணியினர் - படம்: எக்ஸ் / டிஏசிசிஐ
பகிர்:

இங்கிலாந்தின் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் வென்ற இந்திய கலப்பு மாற்றுத்திறனாளிகள் அணியினர் கங்குலியின் புகழ்பெற்ற கொண்டாட்டத்தைச் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடு கொண்டவர்கள் கலப்பு மாற்றுத்திறனாளிகள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான டி20 தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

மொத்தம் ஏழு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இங்கிலாந்து அணி 4-3 என வென்றது. இருப்பினும் கடைசி போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது.

Advertisement

Advertisement

கடைசி போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 206/4 ரன்கள் குவித்தது.

இந்தியா சார்பாக மஜித் மக்ரே 19 பந்துகளில் 63 ரன்களும் அர்ஜுன் கௌர் 44 பந்துகளில் 69 ரன்களும் குவித்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 13.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹிலால் அகமது வானி 4, ஜயேஷ் பர்மார் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். கடைசி ஆட்டத்தில் 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியினர் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி போல லார்ட்ஸ் திடலில் ஜெர்ஸியை கழற்றி கொண்டாடினார்கள். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

summary

Indian mixed disability team recreates Ganguly's iconic Lord's celebration after beating England

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments