FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியா - வங்கதேசம் இடையேயான தொடர்கள் நடைபெறுமா? தமிம் இக்பால் பதில்!

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் எப்போது நடைபெறும் என்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமிம் இக்பால் பேசியுள்ளார்.

42 வினாடிகள் முன்பு
தமிம் இக்பால்
பகிர்:

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் எப்போது நடைபெறும் என்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமிம் இக்பால் பேசியுள்ளார்.

இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுவதாக இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர். இந்தத் தொடரை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், தற்போது இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடுகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் எப்போது நடைபெறும் என்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமிம் இக்பால் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் செப்டம்பரில் நடைபெறாது. இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் இந்தத் தொடர்களை எப்போது நடத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். இரு அணிகளுக்கும் இடையிலான இந்தத் தொடர்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணி விளையாட மறுத்தது. அதன் பின், வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தபிசூர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Bangladesh Cricket Board President Tamim Iqbal has spoken about when the ODI and T20 series between India and Bangladesh will take place.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments