FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

தன்சித் ஹாசன், நஜ்முல் ஹொசைன் அசத்தல்: வங்கதேசம் 153 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் குறித்து...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:19 pm IST
வங்கதேச வீரர். - படம்: பிசிபி டைகர்ஸ்
பகிர்:

ஆஸ்திரேலியா - வங்கதேசம் முதல் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது. இதில் வங்கதேசம் 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

டார்வினில் நேற்று (ஆக.13) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில் 198 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.

அடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் முதல் நாளில் 96/1 ரன்களைச் சேர்த்தது. தற்போது, இரண்டாம் நாள் முடிவில் 110 ஓவர்கள் முடிவில் 351/6 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் தொடக்க வீரர் தன்சித் ஹாசன் தமிம் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 84 ரன்கள் குவித்து அசத்தினார்.

இரண்டாம் நாள் முடிவின்போது களத்தில் மெஹிதி ஹாசன் 32*, ஹாசன் மஹ்முத் 13* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளும் கம்மின்ஸ், லயன் தலா 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.

summary

Tanzid Hasan Tamim Najmul Hossain Shanto striking Day 2: Stumps - Bangladesh lead by 153 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments