FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

மொமினுல் - ஹசன் தமிம் அதிரடி: முதல் நாள் முடிவில் வங்கதேசம் 96 ரன்கள் சேர்ப்பு!

வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:34 pm IST
மொமினுல் ஹக், தன்சித் ஹசன் தமீம்
பகிர்:

வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்துள்ளது. இதில் வங்கதேசம் 24 ஓவர்களில் 96 ரன்களை சேர்த்து அசத்தியுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் சார்பில் பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவருடன் டஸ்கின் அகமது, எபாடொட் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

Advertisement

Advertisement

அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி அதிரடியான ஆட்டத்தையே தொடங்கியது. ஷத்மான் இஸ்லாம் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

முதல் நாள் முடிவில் தான்சித் ஹசன் தமிம் 32, மொமினுல் ஹக் 35 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார்கள். தற்போதைக்கு, 102 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளார்கள்.

வங்கதேச அணிக்கு மீதம் 9 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் முதல் போட்டியில் வெல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

summary

Stumps on Day 1 at Darwin, Bangladesh score 96 runs with one Wicket lose

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments