FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இரவு விடுதியில் அடிதடி எதிரொலி! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

இரவு விடுதியில் அடிதடி எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Updated On : 10 ஜூலை 2026, 6:50 pm IST
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். - படம்: ஏபி.
பகிர்:

இரவு விடுதியில் அடிதடி எதிரொலியாக இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸும், வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் இருவரும் சேர்ந்து வெற்றியைக் கொண்டாட கடந்த ஜூன் 9 ஆம் தேதி நைட் கிளப்புக்குச் சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

அங்கு, இங்கிலாந்தின் முன்னணி ரக்பி கிளப்களில் ஒன்றான 'சரசென்ஸ்' அணியின் அகாதெமி வீரர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. அந்த ரக்பி வீரர் அட்கின்சனைத் தாக்க முயன்றுள்ளார்.

அப்போது, அது தவறுதலாக வீரர்களுடன் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு அதிகாரியின் மீது பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் இருவரும் இரண்டாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர், சர்வதேச போட்டிகளிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 1 - 3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு வீரர்கள் அதிகளவு மது அருந்துவதாகவும், ஒரு வரன்முறையற்று நடந்துகொள்வதாகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

நியூசிலாந்து தொடரின் தோல்விக்கும் இரவு விடுதிகளுக்குச் செல்வது போன்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் இரவு விடுதிகளுக்குச் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள், போட்டி அடுத்த நாள் மது அருந்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வீரர்கள் யாரும் நள்ளிரவில் வெளியே செல்லக்கூடாது, மதுபோதையில் பொது வெளியில் சுற்றவோ, மதுபானங்கள் தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடவோ கூடாது என்றும், இரவு 10 மணிக்கு மேல் ஹோட்டலுக்கு வெளியே இருந்தால் அணி நிர்வாகத்துக்கோ அல்லது பாதுகாப்புப் அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

summary

The England and Wales Cricket Board (ECB) has introduced stricter alcohol and behaviour guidelines for the England men's cricket team following a series of off-field incidents.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments