யு19 இந்திய அணியில் இணைந்த ராகுல் திராவிட்டின் இளைய மகன்!
இந்தியாவின் யு19 கிரிக்கெட் அணியில் இணைந்த ராகுல் திராவிட் மகன் குறித்து...
ராகுல் திராவிட்டின் இளைய மகன் அன்வே திராவிட் இந்தியாவின் யு19 அணியில் இணைந்துள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட தேர்வாகியுள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவிருக்கின்றன.
இந்த இந்திய அணியில் 17 வயதான அன்வே திராவிட் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 4ல் தொடங்கி ஜூலை 20ஆம் தேதி முடிவடைகிறது.
Advertisement
Advertisement
அன்வே திராவிட் கர்நாடக யு19 அணியை வழிநடத்தி விநோ மன்கட் டிராபி தொடரில் காலிறுதி வரைக்கும் வந்தது. இதில் 6 போட்டிகளில் 220 ரன்கள் குவித்து கவனம் பெற்றார். இவர் முன்னதாக யு-19 பி அணியிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான யு19 இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
முன்னதாக, டிராவிட்டின் மூத்த மகன் சமித் திராவிட் 2024ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய யு19 அணியில் இடம்பிடித்தார். காயம் காரணமாக இந்த வாய்ப்பை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் தொடருக்கான யு19 அணி: சாகர் விர்க், லக்ஷயா ராய்சந்தானி (துணைக் கேப்டன்), யஷ்பரந்தன் சிங் சௌஹான் (கேப்டன்), வினீத் விகே, அர்ஜுன் ராஜ்புட், குஷாக்ரா ஓஜா, ரஜத் பாகேல் (கீப்பர்), அன்வே திராவிட் (கீப்பர்), அன்மோல்ஜித் சிங், உட்கரி யாஷ்வீர் கௌட், ரோஹித் அனில் யாதவ், ஷாவின் வி, காவ்யா பரேஷ் படேல், மோஹித் உல்வா, இஷான் சூத்.
டெஸ்ட் போட்டிக்கான யு19 இந்திய அணி: சாகர் விர்க், லக்ஷயா ராய்சந்தானி (துணைக் கேப்டன்), யஷ்பரந்தன் சிங் சௌஹான் (கேப்டன்), படேல் குஷ், மன; சௌஹான், மானவ் கிருஷ்ணா (கீப்பர்), குஷாக்ரா ஓஜா, ஆர்யன் சந்தேஷ் சக்பால் (கீப்பர்), ஹேம்சுதேசன், பிகே கிஷோர், ரோஹித் அனில் யாதவ், காவ்யா பரேஷ் படேல், பிரியான்ஷ் சிங், பிரணவ் ராகவேந்திரா, சிகுருபடி வெங்கடா.