இந்திய விமானி பற்றி ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்? - பாஜக கடும் தாக்கு!
நடுவானில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்ட இந்திய விமானி குறித்து ராகுல் காந்தி மௌனம் காப்பதாக பாஜக குற்றச்சாட்டு...
இஸ்ரேல் சென்ற விமானத்தில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி குறித்து ராகுல் காந்தி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
துபையில் இருந்து இஸ்ரேல் சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது அதனை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி கத்தியால் குத்தித் தாக்கினார். அவருக்கு எதிராகச் சண்டையிட்ட ஸ்மித் உரிய நேரத்தில் விமானி அறையின் கதவைத் திறந்தார்.
இதையடுத்து, அந்த விமானத்தை வேறு இரண்டு விமானிகள் மற்றும் பணியாளர்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உடனடியாக சௌதி அரேபியாவில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்திய விமானி ஸ்மித் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதுவரை ஒரு சமூக ஊடகப் பதிவும் வெளியிடாதது ஏன்? என பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி, சம்பித் பத்ரா கூறுகையில்,
“விமானி ஸ்மித்துக்கு ஒவ்வொரு இந்தியரும் வாழ்த்து தெரிவித்து அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி ஏன் அவர் குறித்து எந்தவொரு ட்வீட்டும் (எக்ஸ் தளப் பதிவு) வெளியிடவில்லை என அவர்தான் கூற முடியும். இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை.
ராகுல் காந்தி எங்கே? அவர் வெளிநாடு சென்றுள்ளாரா என எனக்குத் தெரியாது. அவர் நமது நேர மண்டலத்துக்குள் இருந்தால் நிச்சயம் பதிவிடுவார். நாம் காத்திருப்போம், அவர் மாலைக்குள் பதிவிடக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய விமானி ஸ்மித் மச்சாரை ஹீரோ எனக் குறிப்பிட்டு அவரது செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The BJP has questioned why Rahul Gandhi did not comment on the Indian pilot who saved the lives of passengers after being stabbed with a knife by a co-pilot on a flight to Israel.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.