டெவான் கான்வே, டாம் லாதம் சதம் விளாசல்; வலுவான நிலையில் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டெவான் கான்வே மற்றும் டாம் லாதமின் அசத்தலான சதங்களால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வலுவாக உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டெவான் கான்வே மற்றும் டாம் லாதமின் அசத்தலான சதங்களால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வலுவாக உள்ளது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
டெவான் கான்வே, டாம் லாதம் அசத்தல்!
Advertisement
Advertisement
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 361 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே மற்றும் டாம் லாதம் மிகவும் அற்புதமாக விளையாடினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதம் விளாசி அசத்தினர். டெவான் கான்வே 157 ரன்களும் (22 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) , கேப்டன் டாம் லாதம் 151 ரன்களும் (15 பவுண்டரிகள்) எடுத்தனர். ஹென்ரி நிக்கோல்ஸ் 36 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 7 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
முதல் நாளில் 361 ரன்கள் எடுத்து வலுவாக உள்ள நியூசிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
New Zealand is in a strong position in the first innings of the third Test against England, thanks to magnificent centuries by Devon Conway and Tom Latham.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.