முகப்பு
கிரிக்கெட்

இரண்டு போட்டிகளிலும் சூர்யவன்ஷி விளையாடியிருக்க வேண்டும்: முன்னாள் கேப்டன்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி விளையாடியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜூன் 2026, 6:37 pm IST
வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)
பகிர்:

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி விளையாடியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - அயர்லாந்து இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அயர்லாந்து அணி வரலாறு படைத்தது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டிருந்தார். அதனால், சர்வதேசப் போட்டிகளில் அவர் எப்படி விளையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவர் இரண்டு போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

Advertisement

Advertisement

சுனில் கவாஸ்கர்

இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி விளையாடியிருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடியிருக்கலாம். அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பளித்து, சூர்யவன்ஷியை இரண்டு போட்டிகளிலும் விளையாட வைத்திருக்கலாம்.

சூர்யவன்ஷி போன்ற திறமை வாய்ந்த இளம் வீரருக்கு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது மிகுந்த நம்பிக்கையளித்திருக்கும். ஃபார்மில் இல்லாத வீரர்களுக்குப் பதிலாக சூர்யவன்ஷிக்கு விளையாட வாய்ப்பளிக்கலாம். தொடக்க ஆட்டக்காரர்களில் மாற்றம் செய்ய வேண்டாம் என நினைத்தால், சூர்யவன்ஷியை மூன்றாவது வீரராக களமிறக்கலாம். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்க நினைத்தால், சூர்யவன்ஷி கண்டிப்பாக விளையாட வேண்டும் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுநாள் (ஜூலை 1) முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

summary

A former Indian team captain has stated that Vaibhav Suryavanshi should have played in both matches of the T20 series against Ireland.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments