கேமரூன் கிரீன் பந்துவீசாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்!
கேமரூன் கிரீன் பந்துவீசாதது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியிருப்பதாவது...
கேமரூன் கிரீன் பந்துவீசாதது ஏன் என்பதற்கான காரணத்தை இன்று (மார்ச் 30) கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. டாஸ் வென்ற மும்பை பந்துவீச, கொல்கத்தா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுக்க, மும்பை 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் கேகேஆர் அணியினால் எடுக்கப்பட்டார். இவ்வளவு விலைக் கொடுத்தும் அவர் பந்துவீசாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே, “இந்தக் கேள்விக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாதான் பதிலளிக்க வேண்டும்” எனக் காட்டமாகப் பதிலளித்திருந்தார். இந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலிய உடனடியாகப் பதிலளித்துள்ளது.
Advertisement
Advertisement
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாவது:
கேமரூன் கிரீனுக்கு பின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான குணமடைதல் நடைபெற்று வருகிறது. இதனால், அவர் சிறிது காலத்துக்கு பந்துவீசாமல் இருப்பது நல்லது. குறிப்பாக 10-12 நாள்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
கடந்த 2024 செப். முதல் அக். 2025 வரை கேமரூன் கிரீன் பந்துவீசவில்லை. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரது முதுகுப் பகுதியில் வலி இருப்பதால் அவரால் முழுமையாகப் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையிலும் கேமரூன் கிரீன் மொத்தமாக 19 பந்துகள் மட்டுமே வீசியுள்ளார். பேட்டராக பதிவு செய்திருந்த கிரீனை அதிக விலைக் கொடுத்து வாங்கியது கேகேஆர் அணியின் மோசமான முடிவாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
CA says KKR "fully aware" of Green's bowling unavailability.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.