100% வெற்றி... சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான சாதனை!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபாரமான சாதனை குறித்து...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 220 ரன்களுக்கு அதிகமான ரன்களை குவித்தபோதெல்லாம் அனைத்திலும் வெற்றி பெற்று அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நேற்றிரவு ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் 20 ஓவர்களில் 235/4 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 202/7 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.
இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 11 ஐபிஎல் போட்டிகளில் 220க்கும் அதிகமான ரன்களை முதலில் பேட்டிங் செய்து குவித்துள்ளது. இந்தப் பதினொன்று போட்டிகளிலும் வென்று 100 சதவிகித வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
பாட் கம்மின்ஸ் பொறுப்பேற்ற பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியான தொடக்கத்தை பேட்டிங்கில் செய்கிறது. பவர்பிளேவில் இந்த அளவுக்கு ரன்களைக் குவிக்க முடியும் எனக் காட்டியதும் சன்ரைசர்ஸ் அணிதான்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த அணியாக சன்ரைசர்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. தற்போது, புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
Sunrisers Hyderabad while defending 220+ targets all matches won
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.