✕
முகப்பு

தோனியை போன்று யாருக்கும் வரேவேற்பு கிடைத்து பார்த்ததில்லை: ராஸ் டெய்லர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை போன்று யாருக்கும் வரவேற்பு கிடைத்து பார்த்ததில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ். தோனி - படம்: பிடிஐ
பகிர்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை போன்று யாருக்கும் வரவேற்பு கிடைத்து பார்த்ததில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அண்மையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் விளையாடி வந்த அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

இந்த நிலையில், நியூசிலாந்தில் எந்தவொரு வெளிநாட்டு வீரருக்கும் தோனியை போன்று வரவேற்பு கிடைத்து பார்த்ததில்லை என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் என்னுடைய இரண்டாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விளையாடினேன் என நினைக்கிறேன். அந்தப் போட்டியில் நாங்கள் தோனி தலைமையிலான சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தோம். தோனி மிகவும் சிறந்த வீரர். அவருடனான நினைவுகள் மிகவும் சிறப்பானவை. அவர் மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டன். அவர் பேட்டிங் செய்ய வரும்போது, அவருக்கு கிடைக்கும் வரவேற்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர் சென்னையில் விளையாடினாலும் அல்லது வேறு எங்கு விளையாடினாலும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு இருக்கும்.

உலகம் முழுவதும் அவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கிடைப்பதை பார்க்க அற்புதமாக இருக்கும். அவர் நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பேட்டிங் செய்ய வந்தபோது, மிகவும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. வெளிநாட்டு வீரர் ஒருவருக்கு நியூசிலாந்தில் இப்படியொரு வரவேற்பு கிடைத்து நான் ஒருபோதும் பார்த்தில்லை என்றார்.

Former New Zealand player Ross Taylor has stated that he has never seen anyone receive the kind of reception that former Indian captain Mahendra Singh Dhoni gets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.