நியூசிலாந்தில் விளையாடும் முதல் போட்டியிலேயே சதம் விளாசியது எப்படி? ரகசியம் பகிர்ந்த கே.எல்.ராகுல்!
நியூசிலாந்தில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசியதன் ரகசியத்தை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நியூசிலாந்தில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசியதன் ரகசியத்தை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 486 ரன்கள் எடுத்துள்ளது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 136 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நியூசிலாந்தில் தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசியதன் ரகசியத்தை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீண்ட காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி, கிரிக்கெட் பயணத்தை முடிக்க உள்ளபோது வெவ்வேறு நாடுகளில் மிகவும் சவாலான சூழலுக்கு எதிராக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும். உலகின் சிறந்த பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ள அணிகளுக்கு எதிராக விளையாட வேண்டும்.
நியூசிலாந்தில் பேட்டர்கள் ரன்கள் குவிக்க மிகவும் கடினமாக இருக்கும். அதனால், நியூசிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால், நியூசிலாந்தில் விளையாடும் வாய்ப்பு இதற்கு முன்பாக எனக்கு கிடைக்கவில்லை. அதனால், எனக்கு கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். அதன் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட முன்கூட்டியே இங்கு வந்தடைந்தேன். ஏனெனில், இங்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் எனக்கு கிடையாது.
கடந்த 6-7 மாதங்களாக நியூசிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது குறித்து அதிகம் யோசித்துக் கொண்டிருந்தேன். நியூசிலாந்தில் விளையாடுவதற்கான நிறைய பயிற்சியில் ஈடுபட்டேன். நியூசிலாந்தில் நன்றாக விளையாடி ரன்கள் குவித்தவர்கள் எப்படி அதனைச் செய்தார்கள் என்பதைப் பார்த்தேன். இந்த அனைத்து விஷயங்களையும் சரியாக செய்தது சிறப்பாக விளையாடி சதம் விளாச உதவியது என்றார்.