ஆசிய கோப்பை: இந்தியா ஏ அணிக்கு 314 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான் ஏ அணி!
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஏ அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஏ அணி 313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் கத்தாரில் வெஸ்ட் எண்ட் பார்க் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
மூவர் அரைசதம்; இந்தியா ஏ அணிக்கு 314 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஏ அணி 49.2 ஓவர்களில் 313 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹாசன் நவாஸ் 82 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மாஸ் சதாஹத் 59 ரன்கள், ஃபர்ஹான் யூசஃப் 56 ரன்கள், ஷமில் ஹுசைன் 33 ரன்கள் எடுத்தனர். கேப்டன் அப்துல் சமத் 28 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
இந்தியா ஏ தரப்பில் ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் விப்ராஜ் நிகம் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆயுஷ் பதோனி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.