முகப்பு

ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ்: நேபாளத்தை 72 ரன்களுக்குச் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் பாகிஸ்தானின் அபார வெற்றி குறித்து...

ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ்: நேபாளத்தை 72 ரன்களுக்குச் சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி!
பாகிஸ்தான் ஏ அணி வீரர்கள் - படங்கள்: எக்ஸ் / ஏசிசி மீடியா
பகிர்:

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி நேபாளைத்தை 72 ரன்களில் சுருட்டி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

தோஹாவில் நடைபெற்றுவரும் ஏசிசி ஆடவருக்கான ரைஸிங் ஸ்டார்ட்ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகளின் ஏ அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ரோஹைல் நசீர் 64 ரன்கள் எடுத்தார். நேபாளம் சார்பில் ரஷித் கான் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement

Advertisement

அடுத்து பேட்டிங் செய்த நேபாளம் அணி 17.3 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் மயன் யாதவ் 41 ரன்கள் எடுத்தார். 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து சொதப்பினார்கள்.

பாகிஸ்தான் சார்பில் சுஃப்யான் மோகிம், முகமது ஹஸ்னைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். இந்த அபார வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் சென்றது.

அரையிறுதியில் நவ.26ஆம் தேதி இந்தியா ஏ - இலங்கை ஏ அணியும், நவ.27ஆம் தேதி பாகிஸ்தான் ஏ - வங்கதேசம் ஏ அணிகளும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் நவ.29ஆம் தேதி விளையாடுகின்றன.

summary

Pakistan A secures a resounding victory, bundling out Nepal A for 72 runs in asia cup rising stars

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.