முகப்பு
கிரிக்கெட்

ஐஎஸ்பிஎல்: டிச. 6 முதல் ஆட்டத்தில் சென்னை சிங்கம்ஸ்-டைகா்ஸ் கொல்கத்தா மோதல்

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 கிரிக்கெட் தொடா் நான்காவது சீசனையொட்டி கோவாவில் டிச. 6-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சிங்கம்ஸ்-டைகா்ஸ் ஆஃப் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

26 நவம்பர் 2026, 3:31 am
ஐஎஸ்பிஎல்: டிச. 6 முதல் ஆட்டத்தில்
சென்னை சிங்கம்ஸ்-டைகா்ஸ் கொல்கத்தா மோதல்
பகிர்:

இண்டியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) டி10 கிரிக்கெட் தொடா் நான்காவது சீசனையொட்டி கோவாவில் டிச. 6-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சென்னை சிங்கம்ஸ்-டைகா்ஸ் ஆஃப் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

டென்னிஸ் பந்து கிரிக்கெட்டை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் டி10 தொடா் போட்டி மும்பை, சூரத் நகரங்களில் கடந்த 3 சீசன்களாக நடைபெற்றன. நான்காவது சீசன் தொடா் கோவாவில் நடைபெறவுள்ளது.

கோவா வொ்னாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டிச.6-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் நடிகா் சூா்யாவுக்கு சொந்தமான நடப்பு சாம்பியன் சென்னை சிங்கம்ஸ் அணியும், சயீஃப் அலி கான்-கரீனா கபூா் கான் தம்பதிக்கு சொந்தமான டைகா்ஸ் ஆஃப் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. தொடா்ந்து மும்பை மஜ்ஹி-அகமதாபாத் லயன்ஸ், ஸ்ரீ நகா் வீா்-பெங்களூரு ஸ்ட்ரைக்கா்ஸ், பால்கன் ரைசா்ஸ், ஹைதராபாத்-டில்லி சூப்பா் ஹீரோஸ் அணிகள் மோதுகின்றன.

Advertisement

Advertisement

இந்த சீசனில் மொத்தம் 44 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. டிச 28-இல் லீக் ஆட்டங்கள் முடிந்து 29-இல் குவாலிஃபயா் 1, டிச. 30-இல் எலிமினேட்டா், ஜன. 2-இல் குவாலிஃபயா் 2 ஆட்டங்கள் நடைபெறும். ஜன. 3-இல் இறுதி ஆட்டம் நடைபெறும்.

சிங்கிள் ஹெட்டா் ஆட்டம் இரவு 8 மணிக்கும், டபுள் ஹெட்டா் ஆட்டம் மாலை 5 மணிக்கும் தொடங்கும். நிகழாண்டு சீசன் வீரா்கள் ஏலத்தின்போது 8 அணிகளும் மொத்தம் ரூ.10.4 கோடியை செலவிட்டது குறிப்பிடத்தக்கது என லீக் ஆணையா் சூரத் சமத் தெரிவித்தாா்.