அரையிறுதியில் இந்தியா ஏ பேட்டிங் தேர்வு..! சூர்யவன்ஷி வாணவேடிக்கை நிகழ்த்துவாரா?
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் அரையிறுதியில் மோதும் இந்தியா ஏ - இலங்கை ஏ ஆட்டம் குறித்து...

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் அரையிறுதியில் மோதும் இந்தியா ஏ - இலங்கை ஏ ஆட்டம் தோஹாவில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் திலக் வர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். சூர்யவன்ஷி இந்தப் போட்டியிலும் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
யுஎஇ அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். 28 சிக்ஸர்கள் விளாசி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணியில் தனுஷ் கோட்டியான் அறிமுகமாகிறார். சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சுனில் ஜோஷி அவருக்கு தொப்பியை வழங்கி கௌரவித்தார்.
மற்றுமொரு அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ - வங்கதேசம் ஏ அணிகள் நாளை மதியம் மோதவிருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளில் வெல்லும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறது.
இந்தியா ஏ அணி: வைபவ் சூரியவன்ஷி, அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், திலக் வர்மா (கேப்டன்), குமார் குஷாக்ரா (கீப்பர்), ரிங்கு சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, ஹர்ஷ் துபே, ஹர்ஷித் ராணா, அர்ஷத் கான், ஆயுஷ் பதோனி, தனுஷ் கோட்டியான், பிரின்ஸ் யாதவ், விப்ராஜ் நிகம்