முகப்பு

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை அரையிறுதி: மூவர் அரைசதம்; இலங்கைக்கு 318 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்துள்ளது.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை அரையிறுதி: மூவர் அரைசதம்; இலங்கைக்கு 318 ரன்கள் இலக்கு!
அரைசதம் விளாசிய மகிழ்ச்சியில் அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ
பகிர்:

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்துள்ளது.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தோஹாவில் இன்று (நவம்பர் 26) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

மூவர் அரைசதம் விளாசல்; இலங்கைக்கு 318 ரன்கள் இலக்கு!

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷபாஸ் அகமது 48 பந்துகளில் 54* ரன்களும் (4 சிக்ஸர்கள்), கேப்டன் திலக் வர்மா 66 பந்துகளில் 53 ரன்களும் ( 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்களும், தனுஷ் கோட்டியான் 28 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை தரப்பில் ரவிந்து ஃபெர்னாண்டோ, நிபுன் தனஞ்ஜெயா மற்றும் ஜனித் லியாநாகே தலா இரண்டு விக்கெட்டுகளையும், லகிரு சமரகூன் மற்றும் கருகா சங்கேத் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.

318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது.

summary

In the first semi-final of the Asia Cup 'Rising Stars' cricket tournament, India A, batting first, scored 317 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.