ஆசிய கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் ஏ அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 232 ரன்கள் எடுத்துள்ளது.

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் ஏ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை ரைசிங்ஸ் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில் தோஹாவில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஷஹாதத் ஹொசைன் சதம் விளாசல்!
Advertisement
Advertisement
பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஹாதத் ஹொசைன் சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 118 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மஹிதுல் இஸ்லாம் 42 ரன்கள், மெஹரப் 28 ரன்கள் மற்றும் ரிப்பன் மண்டோல் 19* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
பாகிஸ்தான் தரப்பில் சூஃபியான் மோஹிம் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அலி ராஸா மற்றும் ஹாசன் நவாஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மற்றும் அகமது டேனியல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஏ அணி களமிறங்குகிறது.