13 ஆண்டுகளுக்குப் பிறகு துலீப் கோப்பையை வென்ற கிழக்கு மண்டலம்!
இஷான் கிஷன் தலைமையில் துலீப் கோப்பையை வென்ற கிழக்கு மண்டலம் குறித்து...
இஷான் கிஷன் தலைமையில் கிழக்கு மண்டலம் அணி 13 ஆண்டுகளுக்குப் பிறகு துலீப் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் திடலில் கடந்த செப்.6ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங் தேர்வு செய்தது. தென் மண்டலம் பந்துவீசியது.
முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 708 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் மண்டலம் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் 388/7 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது.
Advertisement
Advertisement
கிழக்கு மண்டலம் அணி 760 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில் நடுவர் ஆட்டத்தை சமனில் முடிந்ததாக அறிவித்தனர். முதல் இன்னிங்ஸில் அதிகமான லீட் இருந்ததால் அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு மண்டலம் அணி துலீப் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. கேப்டன் இஷான் கிஷன் முதல் இன்னிங்ஸில் 270 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 80 ரன்களும் குவித்து அசத்தினார்.
கிழக்கு மண்டலம் கடைசியாக 2011-12 சீசன், 2012-13 சீசன்களில் வென்றிருந்தது. இது அந்த அணிக்கு மூன்றாவது கோப்பை என்பதும், உள்ளூர் போட்டிகளில் இஷான் கிஷன் தோல்வியே காணாமல் ஆதிக்கம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
East Zone clinch Duleep Trophy after 13 years, overwhelming South Zone on first innings lead in the final at Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.