FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் பீட்டர்சன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ஹாரி ப்ரூக்

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கெவின் பீட்டர்சன் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

17 செப்டம்பர் 2026, 6:54 pm IST
ஹாரி ப்ரூக் - படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
பகிர்:

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கெவின் பீட்டர்சன் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் 49 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கெவின் பீட்டர்சன் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாக நான் கெவின் பீட்டர்சன் விளையாடிய போட்டிகளின் ஹைலைட்ஸினை பார்த்துக் கொண்டிருந்தேன். பல்வேறு விதமான ஆடுகளங்களின் தன்மையை புரிந்துகொண்டு என்னுடைய ஆட்டத்தினை மேலும் மேம்படுத்திக் கொள்ள பீட்டர்சன் எனக்கு உதவுவார். வெள்ளைப் பந்து போட்டிகளில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டியிலும் என்னுடைய ஆட்டத்தில் அவரால் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் கெவின் பீட்டர்சன் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன்.

இங்கிலாந்து அணியில் உள்ள வீரர்கள் பலரும் கெவின் பீட்டர்சனை எங்களது ஹீரோவாகப் பார்க்கிறோம். நாங்கள் அனைவரும் அவரைப் பார்த்து வளர்ந்து வந்துள்ளோம். அவரைப் போன்ற அனுபவம் மிகுந்த ஒருவர் எங்களுடன் இருப்பது அணிக்கு மிகப் பெரிய பலம் என்றார்.

அண்மையில் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டதும், அடுத்தாண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை அவர் அந்தப் பொறுப்பில் தொடர்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

England captain Harry Brook has stated that Kevin Pietersen will have a huge impact on his cricketing journey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments