FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜப்பானில் கிரிக்கெட் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

ஜப்பானில் கிரிக்கெட் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

21 செப்டம்பர் 2026, 4:14 pm IST
ஷ்ரேயாஸ் ஐயர் - படம் | பிசிசிஐ
பகிர்:

ஜப்பானில் கிரிக்கெட் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஆசியப் போட்டியில் விளையாடுவதற்காக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி ஜப்பான் சென்றடைந்தது. ஆசியப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக ஜப்பானுடன் இருதரப்பு டி20 போட்டி ஒன்றில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்தியா - ஜப்பான் இடையேயான் 75 ஆண்டுகால உறவை கொண்டாடும் விதமாக இந்த இருதரப்பு டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஜப்பானில் கிரிக்கெட் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை என இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜப்பானில் கிரிக்கெட் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், கிரிக்கெட் அனைத்து நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. அனைத்து நாடுகளும் அவர்களுக்கே உரித்தான முறையில் சிறப்பான கிரிக்கெட்டினை விளையாடி வருகிறார்கள். அதனால், இந்தியா - ஜப்பான் இடையிலான டி20 போட்டி சுவாரசியமானதாக இருக்கும்.

ஜப்பான் மிகவும் அழகாக இருக்கிறது. நாங்கள் இங்கு வந்தடைந்தவுடன் இங்குள்ள மக்கள், அவர்களது கலாசாரம், உபசரிக்கும் விதம் ஆகியவற்றை பார்த்தோம். இந்தியாவில் இருப்பதைப் போன்றே உணர்கிறோம். இந்தியாவில் எப்படி விருந்தோம்பல் இருக்குமோ, அதே அளவுக்கு ஜப்பானிலும் சிறப்பான விருந்தோம்பல் உள்ளது என்றார்.

summary

Indian team captain Shreyas Iyer has stated that he never imagined he would play cricket in Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments