FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டி20 உலகக் கோப்பையில் தினேஷ் காா்த்திக் ‘ஃபினிஷா்’- காவஸ்கா் யோசனை

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடி வரும் தினேஷ் காா்த்திக், நடப்பாண்டில் எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் ‘ஃபினிஷா்’-ஆக செயல்படும் திறன் படைத்தவா் என்று

1 பிப்ரவரி 2024, 2:31 pm IST
பகிர்:

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடி வரும் தினேஷ் காா்த்திக், நடப்பாண்டில் எதிா்வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் ‘ஃபினிஷா்’-ஆக செயல்படும் திறன் படைத்தவா் என்று முன்னாள் வீரா் சுனில் காவஸ்கா் கூறியுள்ளாா்.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுருக்காக ஆடி வரும் தினேஷ் காா்த்திக் நடப்பு சீசனில் அருமையான ஃபாா்மில் இருக்கிறாா். அணியின் டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போகும் நிலையில், குறிப்பாக சேஸிங்கின் இறுதிக் கட்டத்தில் அணியை மீட்டெடுக்கும் வீரராக நிற்கிறாா். ஸ்டிரைக் ரேட்டாக 209.57, சராசரியாக 197 வைத்திருக்கிறாா். ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 5-இல் ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறாா். தொடா்ந்து நிலையான ஃபாா்மில் இருக்கும் அவா், டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், அவா் குறித்து சுனில் காவஸ்கா் கூறுகையில், ‘டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் விளையாட தினேஷ் காா்த்திக் விருப்பம் தெரிவித்துள்ளாா். அவரது வயதைப் பாா்க்காமல் அவா் வெளிப்படுத்தும் ஆட்டத்தைப் பாா்கலாம். அவா் தனது பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கையே மாற்றுகிறாா். அணிக்கு சிறப்பாக பங்களிப்பு செய்யும் அவா் உலகக் கோப்பை போட்டியில் 6 அல்லது 7-ஆவது வீரராக ‘ஃபினிஷா்’ நிலையில் களமிறக்கலாம்’ என்றாா்.

Advertisement

Advertisement

தினேஷ் காா்த்திக் கடைசியாக 2019 உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக விளையாடியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments