ஹார்திக் பாண்டியா படம் | ஐபிஎல்
ஐபிஎல்

ஹாட்ரிக் தோல்வி: மும்பை கேப்டன் ஹார்திக் கூறியது என்ன?

இந்த ஐபிஎல் தொடரில் மனம் தளராமல் தொடர்ந்து போராடுவோமென மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

DIN

இந்த ஐபிஎல் தொடரில் மனம் தளராமல் தொடர்ந்து போராடுவோமென மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. நேற்றையத் தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் மனம் தளராமல் தொடர்ந்து போராடுவோமென மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மனம் தளர்ந்துவிட மாட்டோம். நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். முன்னேறிக் கொண்டே இருப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT