FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

பிராவோவின் சாதனையை சமன் செய்த மோஹித் சர்மா!

சென்னை அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை மோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

Updated On : 25 மார்ச் 2024, 5:39 pm IST
மோஹிட் சர்மா - படம் |AP
பகிர்:

சென்னை அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை மோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. குஜராத் அணியின் மோஹித் சர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டுவைன் பிராவோ - படம் | ஐபிஎல்

நேற்றையப் போட்டியில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள சென்னை அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை மோஹித் சர்மா சமன் செய்துள்ளார். மும்பைக்கு எதிராக பிராவோ மற்றும் மோஹித் இருவரும் 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள வீரர்கள்

டுவைன் பிராவோ - 33 விக்கெட்டுகள்

மோஹித் சர்மா - 33 விக்கெட்டுகள்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 26 விக்கெட்டுகள்

யுஸ்வேந்திர சஹால் - 25 விக்கெட்டுகள்

பியூஸ் சாவ்லா - 25 விக்கெட்டுகள்

அமித் மிஸ்ரா - 25 விக்கெட்டுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments