FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

ஷர்துல் வேகத்தில் திணறிய ஹைதராபாத்: லக்னௌவுக்கு 191 ரன்கள் இலக்கு!

லக்னௌ அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 மார்ச் 2025, 9:35 pm IST
ஷர்துல் தாக்குர்..
பகிர்:

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஹைதராபாத் - லக்னௌ அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அனைவரையும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

Advertisement

அதிரடி ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் இருவரும் மெதுவான தொடக்கம் அளித்தனர். ஏமாற்றமளிக்கும் வகையில் அபிஷேக் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் வந்த முதல் போட்டியின் சதம் நாயகன் இஷன் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் விளாசினார். அவரைத் தவிர்த்து நிதிஷ் குமார் ரெட்டி 32 ரன்களிலும், 5 சிக்ஸர்களுடன் அனிகேத் வர்மா 36 ரன்களும், தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் 3 சிக்ஸர்கள் விளாசிய பேட் கம்மின்ஸ் 18 ரன்களிலும் வெளியேறினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவேஷ், திக்வேஷ், பிஷ்னோய், பிரின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

லக்னௌ அணி 191 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments