சிரி... சிரி...
ஓட்டல்ல ஹெட் மாஸ்டரா? ஆமாம். எல்லா மாஸ்டர்களையும் கண்காணிப்பவர்.
ஓட்டல்ல ஹெட் மாஸ்டரா?
ஆமாம். எல்லா மாஸ்டர்களையும் கண்காணிப்பவர்.
Advertisement
Advertisement
இப்போ ஜாதக ரீதியா உங்களுக்கு என்ன தசை?
எப்பவுமே சிரம தசைதான்.
- பர்வதவர்த்தினி, பம்மல்.
ரொம்ப நேரமா குக்கர்ல விசில் வரலை, அத்தை...
அப்புறம் என்ன செஞ்சே?
நானே மூணு விசில் அடிச்சு இறக்கிட்டேன்.
உங்க வீட்டைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே... நாயா அலைஞ்சுட்டேன்.
உள்ளே வாங்க... என்ன சாப்பிடறீங்க... பொறையா பிஸ்கட்டா?
-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தலைவர் ஏன் கோழிக் கிறுக்கலா எழுத ஆரம்பிச்சிட்டாரு?
டாக்டர் பட்டத்துக்கு அடி போடுறாராம்!
பாங்க்ல கோடிக்கணக்குல லோன் வாங்கிட்டு திருப்பிக் கட்டாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினவரை, அந்த நாடும், நாடு கடத்திடுச்சாம்!
ஏன் சார்?
அங்கேயுள்ள பாங்க்லேயும் லோன் வாங்க முயற்சி பண்ணினாராம்!
உங்க பையன் ஒருத்தன் சகட்டுமேனிக்குப் பொய் சொல்லுவானே... அவன் இப்ப என்ன சார் செய்யறான்?
பெரிய கல்யாண தரகரா இருக்கான், சார்!
-வி.ரேவதி, தஞ்சை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.