FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஐபிஎல்

மாற்றுவீரர்களாக மும்பை அணியில் இணையும் நட்சத்திர பட்டாளம்!

மாற்று வீரர்களாக மும்பை அணியில் இணைந்த நட்சத்திர பட்டாளத்தைப் பற்றி...

Updated On : 20 மே 2025, 11:41 am IST
பகிர்:

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா - பாகிஸ்தான் இடையான போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும், போட்டி அட்டவணை மாற்றம், தேசிய அணிக்கு விளையாட என வீரர்கள் பலர் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் மீண்டும் ஐபிஎல்லில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அணி நிர்வாகம் மாற்றுவீரர்களை அணியில் இணைத்து வருகின்றனர்.

இதேபோல மும்பை அணிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இன்னும் 2 லீக் போட்டிகளில் ஆடவுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி மீதமுள்ள லீக் போட்டிகளில் வென்று முதல் இரு இடங்களில் ஒரு இடத்தை பிடிக்கும் முனைப்பில் இருந்தாலும், இந்த இரண்டு போட்டியுமே மும்பை இந்தியன்ஸுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையிலேயே இருக்கிறது.

Advertisement

Advertisement

இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ், தென் ஆப்ரிக்கா வீரர் ரியான் ரிக்கல்டன் ஆகிய இருவரும் மும்பை அணியின் லீக் சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். பிளே-ஆப் போட்டிகளில் அவர்கள் பங்கேற்க முடியாததால் அவர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று ஆடும் பட்சத்தில், மாற்று வீரர்களாக விளையாடுவதற்கு, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோரும், தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போர்ஷுக்குப் பதிலாக இலங்கை வீரர் சரித் அசலங்காவும் மும்பை அணியில் இணைந்துள்ளனர்.

பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்த ஜானி பேர்ஸ்டோ, ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன நிலையில் அவரை ரூ.5.25 கோடிக்கும், ரிச்சர்ட் க்ளீசனை ரூ.1 கோடிக்கும், சரித் அசலங்காவை ரூ.75 லட்சத்துக்கும் மும்பை அணி ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இதையும் படிக்க: மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments